Gold-Anklet-1
Gold-Anklet-1

கன்னியாகுமரி அருகே அரசு பேருந்தில் கிடைத்த தங்கக் கொலுசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அடுத்த சாமி விளையை சேர்ந்தவர் புஷ்பராணி. இவர் அழகிய மண்டபத்தில் இருந்து களியக்காவிளை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் ஒரு தங்க கொலுசு கீழே கிடப்பதை கண்டெடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த தங்க கொலுசை புஷ்பராணி களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்

அந்த கொலுசுக்கு உரியவர் மற்றொரு கால் கொலுசை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கொலுசின் உரிமையாளர் கண்டறியப்பட்டு புஷ்பராணியின் முன்னிலையில் ஒப்படைக்கபப்ட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending