mini bus
mini bus

குன்னுாரில் மூதாட்டி ஒருவர், தங்க செயின் மற்றும் பணத்துடன் தவறவிட்ட ‘பர்சை’, ஒப்படைத்த, மினி பஸ் கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குன்னுார் ஓட்டுப்பட்டறையை சேர்ந்தவர் சகுந்தலா,70. நேற்று முன்தினம் இவர் மார்கெட்டிற்கு, மினி பஸ்சில் வந்தபோது, பர்சை தவறவிட்டுள்ளார்.

பர்சில், 1.5 பவுன் செயின், 5,000 ரூபாய், ஆதார் கார்டு இருந்துள்ளது. இது தொடர்பாக, போலீசில் புகார் தெரிவித்து சி.சி.டி.வி., கேமரா ஆய்வு செய்தனர். எனினும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மினி பஸ்சில் பணியில் இருந்த கண்டக்டர் ஜீவா, டிரைவர் பிரதாப் ஆகியோர், நகை; பணத்தை மூதாட்டியிடம் நேற்று ஒப்படைத்தனர்.

மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending