court-1
court-1

தாயின் பெயரையும் ‘இனிஷியலாக’ பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உள்ளது’ என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயின் பெயரைஇனிஷியலாக பயன்படுத்துவது தொடர்பான வழக்கு, தில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி ரேகா பாலி விசாரித்தார். மனு தாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:என் கட்சிக்காரரின் மகள் மைனர்.

ஆனால், அவளது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிஷியலாக மாற்றப்பட்டுள்ளது; இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி உத்தரவிட்டதாவது: குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த உரிமை உள்ளது.

தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending