ரயிலை நிறுத்தி யானையை காப்பாற்றிய ஓட்டுநர்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
elephant
elephant

ரயில்களில் மோதி மரணம் அடையும் யானைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. காடுகளுக்குள் செல்லும் தண்டவாளங்கள் மற்றும் அதி விரைவு ரயில்கள் போன்றவை இந்த மரணங்களுக்கு காரணம் என்று யானை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ஒரு தீர்வினை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் தண்டவாளம் அருகே யானை ஒன்று இருப்பதை பார்த்த ரயில் ஓட்டுநர் அவசர பிரேக்கை உபயோகித்து அந்த யானையை காப்பாற்றியுள்ளார்.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த யானை அடிபடுவதில் இருந்து காப்பாற்றிய ஓட்டுநர் டி. துரை மற்றும் பி. குமார் ஆகியோருக்கு நன்றி கூறி யானையின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.