இரயிலைத் தள்ளிய மக்கள்! வைரல் வீடியோ!

Published:

train
train

பைக், கார், பேருந்து, லாரி ஆகியவை பழுதடைந்து நின்றால் தள்ளிச் செல்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் பழுதடைந்து நின்ற ரயிலை தள்ளி செல்வதை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பழுதடைந்த ரயிலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தள்ளி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் ரயில்கள் இயங்கும் மின்சார வயர்களை ரயில் வேகனில் சென்று சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது ரயில் வேகனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் என முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு ரயில் பெட்டியை கையால் தள்ளி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கு பலரும் கடுமையான விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர். கூர்மையான கற்களை மிதித்தவாறு அவர்கள் ரயிலை தள்ளி சென்றுள்ளனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img