செத்தாலும் காங்கிரஸுடன் சேர மாட்டேன்னீங்களே குமாரசாமி… இப்போ செத்துட்டீங்களா?!

செத்தாலும் காங்கிரஸுன் சேரமாட்டேன்.. என்னை நம்பி ஓட்டு போடுங்க… என்று அடித்துக் கூறினார் மஜத., தலைவர் குமாரசாமி. ஆனால், முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போதே, காங்கிரஸுடன் சேர ஆயத்தமாகிவிட்டார். பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டாகச் சென்று ஆளுநரை சந்தித்தார்.

இது குறித்து ஒரு வீடியோ பதிவு வைரலாக உலா வருகிறது. ஒரு டிவி விவாதத்தில் பங்கேற்ற குமாரசாமி, பொதுவில் சத்தியம் செய்கிறார். இப்போது எழுதி வைத்துக் கொள்ளுங்கள், சத்தியம் செய்கிறேன், எழுதி வேண்டுமானாலும் தருகிறேன்… என்னை நம்பி ஓட்டு போடுங்கள்… செத்தாலும் காங்கிரஸுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று அடித்துக் கூறுகிறார் குமாரசாமி.

இது குறித்த வீடியோ பதிவுடன், பல்வேறு கருத்துகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன… தேர்தலுக்கு முன் அப்படி சொல்லிவிட்டு, மறுநாளே சேர்ந்துட்டியே… நீ செத்துட்டியா என்று பலரும் டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

அதில் ஒரு டிவிட்டர் பதிவு….

// செத்தாலும் காங்கிரஸ் உடன் கூட்டணி சேர மாட்டேன். நம்பி ஓட்டு போடுங்க.. சத்தியம் பண்ணி எழுதி கையெழுத்து வேணாலும் போட்டு தர்றேன் // கர்நாடக தேர்தலுக்கு மொத நாளு, நேரலை debate ல குமாரசாமி சொன்னது 👇👇👇 ஆமைக்கறி சைமனுக்கு அண்ணனா இருப்பியான் போலயே 😂 #KarnatakaVerdict