ops eps tweet - 2026

தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் என இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை செய்துவருவதாகக் கூறப் படுகிறது. இருந்தாலும் அவ்வப்போது, இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஏதாவது ஒரு குழலில் அடைப்பு ஏற்படுவதும் அது நீக்கப் படுவதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு குழுவாகப் பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்துவிட்ட ஓபிஎஸ்.,ஸும், எதிர்பாராத விதமாக ஒரு குழுவுக்கு தலைவராகி விட்ட ஈபிஎஸ்ஸும் பின்னர் கைகோத்துக் கொண்டாலும், இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக அவ்வப்போது சட்டப் பேரவையில் யாராவது அமைச்சர்களை வைத்து ஒற்றுமை கோஷம் போடச் சொல்லி விடுகிறார்கள்.

நேரம் கிடைக்கும் போது, இருவருமே ஒருவருக்கு ஒருவர் பாசப் பிணைப்புடன் இருப்பதாக, சட்டமன்றத்திலும் மேடைகளிலும் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொள்கிறார்கள். மற்ற வேலைகள் இருவர் தரப்பிலும் ஒழுங்காக நடக்கிறதோ இல்லையோ, இணையத்தில் இருவரின் டிவிட்டர் பதிவுகளை கையாளும் நபர்களுக்கு மட்டும் ஒரு உத்தரவை இட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பதிவுகளை மறக்காமல் லைக்கிட்டும், ரிடிவீட் செய்தும் ஓபிஎஸ் பக்கத்தில் காணலாம். அதுபோல், ஓபிஎஸ் பதிவுகளை ஈபிஎஸ் பக்கத்தில் லைக்கிட்டும் ரிட்வீட்டிட்டும் கடமையை சரியாகச் செய்து வருகிறார்கள். ஆக, இணையத்திலும் ஓங்குக ஒற்றுமை!

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending