December 9, 2024, 4:02 AM
26.4 C
Chennai

சங்கர் மகாதேவனின் நான் ஸ்டாப் இந்தியா! பாராட்டிய மோடி!

சுதந்திர தினத்தை ஒட்டி நான் ஸ்டாப் இந்தியா என்ற பெயரிலான பாடல் ஒன்றை சங்கர் மகாதேவன் குரலில் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் சங்கர் மகாதேவன். மேலும், புதிய உச்சத்தை நம் நாடு தொடும் வளர்ச்சி அடையும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

அவரது பாடலையும் டிவிட்டர் பதிவினையும் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, மிக அழகான இசை கோப்பு என்று குறிப்பிட்டு, இந்தப் பாடல் உங்களின் ப்ரீத்லெஸ் பாடலை நினைவூட்டுகிறது. மூச்சுவாங்காமல் தடையற்ற பாடலைப் போல் 125 கோடி இந்தியர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள்.. என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  பழநி கோயிலுக்கு நீதிமன்றத்தால் ... ஒரே வருடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல்!

அதற்கு பதிலளித்துள்ள சங்கர் மகாதேவன், நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், உங்களின் அயராத உழைப்பு என்னைக் கவர்ந்தது. மிகப் பெரும் நோக்கத்திற்கான எனது சிறிய பங்களிப்பு என்று அடக்கத்துடன் கூறியுள்ளார்.