h raja1 - 2026

சென்னை: ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார்.hrajanewsss 1 - 2026

நீதிமன்றத்தையும் போலீசாரையும் அவதூறாகப் பேசிவிட்டார் ஹெச்.ராஜா என்று ஒரு புகார் மனு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் கொடுக்கப் பட்டு, அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

hrajanewsss - 2026இதை அடுத்து, ஹெச்.ராஜாவை கைது செய்வதற்காக, திருமயம், பொன்னமராவதி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் ஞாயிறன்று அமைக்கப்பட்டன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்றுப் பேசினார்.

h rajanewss - 2026இதற்கிடையே இன்று மாலை செய்தித் தாள்களிலும் ஊடகங்களின் பிளாஷ் செய்திகளிலும், ஹெச்.ராஜா தலைமறைவு என்றே செய்திகள் போடப் பட்டுக் கொண்டிருக்க, இன்று மாலை நடைபெற்ற ஹிந்து முன்னணி விநாயகர் விழாவில் கலந்து கொண்டு பேசினார் ஹெச்.ராஜா.

ALSO READ:  திமாகி நக்சல்கள் – யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending