வெற்றிகரமாக செலுத்தப் பட்டது ஜிசாட்-31 செயற்கைக்கோள்

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம்
isro gsat31 - 2026

தகவல் தொடர்பு சேவைகளுக்கான ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் – 31 என்ற 40 வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இந்த செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியான் – 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற இந்த செயற்கைக்கோள் உதவும். மொத்தம், 2,535 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் உள்நாட்டில் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாது நாட்டை சுற்றியுள்ள பெருங்கடல்கள் குறித்த தகவல்களையும் அளிக்கும்.

இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.