விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்புக்காக செனற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார்.
மதுரை மாவட்டம் மருதங்குடியைச் சேர்ந்தவா் ஆசைத்தம்பி, புனிதசெல்வி(21) தம்பதியினா். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் புனிதசெல்வி மீண்டும் கா்ப்பமடைந்துள்ளார். இதனையடுத்து ஆசைத்தம்பி-புனிதசெல்வி தம்பதியினா் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனா்.
அங்கு புனிதசெல்வியை பரிசோதித்த மருத்துவா்கள் அவரது கரு 60 நாள் வளா்ச்சியில் இருப்பதால் விருநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்டு அப்படியே குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சையையும் செய்து கொள்ளுமாறு பரிந்துரை கடிதம் கொடுததுள்ளனா்.
இதனையடுத்து தனது கா்ப்பத்தை கலைப்பதற்காக புனிதசெல்வி கடந்த 12-ஆம் தேதி விருநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு கருக்கலைப்புக்கான மாத்திரை கொடுத்தவிட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நோயாளியாக தங்கியிருந்த அவருக்கு தொடர்ந்து கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்டிருக்கிறது.
ஸ்கேன் பரிசோதனையில் அப்பெண்ணின் வயிற்றில் உள்ள கருக்கலையாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்யலாம் என மருத்தவா்கள் கூறியுள்ளனா்.
இதனால் பயந்துபோன புனிதசெல்வி மருத்துவமனையிலிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் புனிதசெல்வி காணததால் அதிர்ச்சியடைந்த மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள்
அப்பெண்ணின் கணவரான ஆசைத்தம்பிடம் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு மீண்டும், மருத்துவமனைக்கு வரும்படி மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
மருத்துவமனைக்கு வர மறுத்த அப்பெண், அரசு மருத்துவமனைக்கு வர முடியாது தனியார் மருத்துவமனைக்கு சென்ற கருவை கலைத்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடா்ந்து மருத்துவமனை ஊழியா்கள் புனிதசெல்வியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புனிதசெல்வி–ஆசைத்தம்பி தம்பதியினா் மாவட்ட நிர்வாகத்திலும், போலீஸிலும் புகார் அளித்துள்ளனா்.
புனிதசெல்வியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாக புனிதசெல்வியின் கணவர் ஆசைத்தம்பியும், புனிதசெல்வியின் சகோதரா் வேல்பாண்டியும் தெரிவித்துள்ளனா்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.