Homeஅடடே... அப்படியா?இருவரின் சம்மத்திற்காக காத்திருக்கும் ‘கரகாட்டகாரன் 2“

இருவரின் சம்மத்திற்காக காத்திருக்கும் ‘கரகாட்டகாரன் 2“

karakattakaran 1 - Dhinasari Tamil

தமிழக சினிமா வரலாற்றில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்த படங்கள் பல இருந்தாலும், 500 நாட்கள் ஓடி சாதனை படைத்த படங்கள் ஒரு சில படங்கள் மட்டுமே.

கடந்த 1989 ஆம் ஆண்டு, நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை கனகா நடிப்பில், இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கரகாட்டகாரன். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில், காதலும், நகைச்சுவையும், கலந்து எதார்த்தமான படமாக இயக்கி இருந்தார் கங்கையமரன்.

KARAKATTAKARAN 3 - Dhinasari Tamil

இன்றைய கால கட்டத்தில் ஒரு திரைப்படம் ஒரு வாரம் திரையரங்குகளில் தாக்கு பிடித்து ஒடுவதே கடினமாக உள்ள நிலையில், 500 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது ‘கரகாட்டகாரன்’.

மேலும் இப்படம் நடிகர் ராமராஜனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதே போல் காமெடி வேடத்தில் நடித்திருந்த, நடிகர் செந்தில் கவுண்டமணி, கோவை சரளா, ஆகியோரின் காமெடி காட்சிகளும் ரசிகர்களின் கை தட்டல்களை குவித்தன.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தான பாரதி, சந்திரசேகர், காந்திமதி, ஜூனியர் பாலையா, உள்பட பலர் நடித்திருந்தனர்.

KARAKATTAKARAN 4 - Dhinasari Tamil

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்க இயக்குனர் கங்கை அமரன் முயற்சி செய்து வருகிறார்.

இந்த படத்திற்கும் முதல் பாகத்திற்கு இசை அமைத்த இசைஞானி இளையராஜாவின் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள கங்கை அமரன், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராமராஜன் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ELIARAJA - Dhinasari Tamil

இவர்கள் ஒருவேளை சம்மதித்தால், இரண்டாம் பாகத்திலும் இவர்களின் நடிப்பை ரசிகர்கள் பார்க்கலாம். விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,161FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,477FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

தந்தையின் பயோபிக்கில் தந்தை ரோலில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!

நடிக்க மாட்டேன் என சட்டென மறுப்பு கூறி விட்டார் மகேஷ்பாபு.

Latest News : Read Now...