“செயற்கரிய திருப்பணியா?, திருட்டுப் பணியா?”

(பெரியவாளின் வேதனையும், சாடலும்)

(அறநிலையத் துறை ஆணையரிடம்-“இதர மதஸ்தர்கள், கமிட்டி போட்டு எத்தனையோ நல்ல காரியம் செய்யறா, உங்க அதிகாரிகள் என்ன செய்யறா? வரவு – செலவுக் கணக்கு, ஆடிட்,உண்டியல் திறப்பது…தேரோட்டம் என்றால்,வடத்தைப் பிடித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்வது.!”)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-174
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்”

நான் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டு ஒரு வருஷமாகிறது. முப்பத்திரண்டு கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. பெரியவாள் உத்தரவிட்டால், அந்த கோயில்களிலும் திருப்பணி செய்யக் குழு அமைக்கிறேன்.” என்று அப்போதைய அறநிலையத் துறை ஆணையர் பெருமிதத்துடன் கூறினார்.

“ரொம்ப சந்தோஷம்.நிறையக் கோயில்களைக் காப்பாற்றி இருக்கே! ரொம்ப நல்ல சமாசாரம். இன்னும் எத்தனையோ கோயில்கள் – பாடல் பெற்ற ஸ்தலங்கள், மங்களாசாசனம் பெற்ற கோயில்கள் இருக்கு. பெரிய கோயில்களைப் பற்றி அவ்வளவா கவலைப்பட வேண்டியதில்லே.ஆயிரக் கணக்கில் இருக்கும் சின்னக் கோயில்களைப் பற்றி யாரும் – அதாவது, எந்த டிபார்ட்மெண்ட்டும் – கவலைப்படறதில்லே.””சிவாச்சாரியாருக்குச் சம்பளம் இல்லே..இருந்தாலும் கொடுக்கிறதில்லே; கொடுத்தாலும் பாதிப் பணம்தான் கொடுக்கிறது. கோயில் சொத்துக்களுக்கு முறையான ரிகார்டு இருக்கா? குத்தகைக்காரன் தவறாமல் செலுத்துகிறானா? பொலிடீஷியன்ஸ் தயவிலே…பல இடங்களிலே குத்தகைக்காரர்கள் முழுப் பயனையும் அனுபவிக்கிறார்கள். கோயில் சொத்து, குல நாசம்.. அடுத்த, அடுத்த தலைமுறையில் தெரியும்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

“”முன் காலத்தில், கோயில் உச்சிக்கால மணிச்சப்தம் கேட்ட பிறகுதான், ராஜாக்கள் சாப்பிடுவார்கள். இப்போ எல்லாருமே ராஜா ஆகிவிட்டதாலே, ஒரு ராஜா இன்னொரு ராஜாவைத் தட்டிக் கேட்க முடியல்லே.””நம்ம கோயில்களில் திருவிழா,பந்தக்கால் முகூர்த்தம், துவாஜாரோஹணம்,கும்பாபிஷேகம் – எதுவாக இருந்தாலும், சங்கல்பம் என்ன தெரியுமோ? – ராஷ்ட்ர, ராஜ்ய அபிவிருத்யர்த்தம் – தேசம் மக்கள் எல்லாரும் சௌக்கியமாக இருக்கணும் என்கிறதுதான்.”

“இதர மதஸ்தர்கள்,கமிட்டி போட்டு எத்தனையோ நல்ல காரியம் செய்யறா, உங்க அதிகாரிகள் என்ன செய்யறா? வரவு – செலவுக் கணக்கு, ஆடிட், உண்டியல் திறப்பது தேரோட்டம் என்றால்,வடத்தைப் பிடித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்வது.!”

“கிராமத்து ஆலயங்களுக்கு நீங்கள் எங்கே போகிறீர்கள்? கிராம ஜனங்களுக்கு இன்னும் பக்தி இருக்கு. அவாளோட சொற்ப வருமானத்திலே, கோயில்களை எப்படியோ கட்டிக் காத்திண்டிருக்கா.”

“கிராமங்களில் உள்ள கிராம தேவதைக் கோயில்களுக்குத் திருப்பணி செய்யணும்…பெரிய கோயில்களிலே திருட்டுப் பணிதான் நடக்கிறதா, பல பேர் வந்து சொல்றா.. மனசுக்கு வேதனையா இருக்கு…”

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

அறநிலையத்துறை ஆணையர், “என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்று சொல்லி,பிரசாதம் பெற்றுச் சென்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending