ஏப்ரல் 14, 2021, 2:09 காலை புதன்கிழமை
More

  திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா!


  e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0af8be0ae95e0af82e0aeb0e0af8d e0ae95e0aebee0aeb3e0aeaee0af87e0ae95 e0aeaae0af86e0aeb0e0af81e0aeaee0aebe - 2

  மதுரை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெற்றது.

  புராண வரலாறு:
  முற்பிறப்பில் சிறந்த விஷ்ணு பக்தராக வாழ்ந்த மன்னன் கஜேந்திரன். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திரன் யானையாக பிறந்தார். அதே போன்று முனிவர் தேவலாவின் சாபத்தால் கந்தர்வன் ஒருவன் முதலையாக பிறந்தார்.

  இருவருக்கும் சாப விமோசனம் அளிக்க பெருமாள் வந்தருளுவார் என்று முனிவர்கள் வரமளித்தனர்.அதன்படி இருவரும் திரிகூடமலையில் வசித்தனர். அப்பகுதியிலுள்ள குளத்திற்கு தாகம் தணிக்க யானை தனது கூட்டத்துடன் வந்தது. அப்போது அங்கிருந்த கந்தர்வனான முதலை மன்னன் கஜேந்திரனான யானையின் காலை கவ்விப் பிடித்தது.

  மற்ற யானைகள் எவ்வளவு முயன்றும் முதலையிடம் இருந்து யானையை காப்பற்ற முடியவில்லை. முதலையும், யானையின் காலை விடுவதாக தெரியவில்லை.

  எனவே தனது இறுதிகாலம் நெருங்குவதாக உணர்ந்த மன்னன் கஜேந்திரனான யானை துதிக்கையால் குளத்திலுள்ள தாமரையை பறித்து வானை நோக்கி ஆதிமூலமே என பெருமாளை வேண்டி பிளிரி சரணாகதி அடைந்தது.

  தனது பக்தனின்(யானை) துயர் துடைக்க வானில் கருட வாகனத்தில் தோன்றிய பெருமாள் தனது சக்கர ஆயுதத்தை ஏவி முதலையின் தலையை துண்டித்து யானையை காப்பாற்றி மோட்சம் அளித்தார். இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன.

  கஜேந்திர மோட்ச திருவிழா
  இந்த புராணத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெறும்.

  இதற்காக நரசிங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள குளக்கரையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய வழித்துணை பெருமாள் முன்பு யானையின் காலை கவ்வும் முதலை பொம்மைகளை வைத்து கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியை கோவில் பட்டர்கள் செய்து காட்டினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


  Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  4 × one =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »