thiruvannamalai tree2 horz - 2026

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள எதற்கும் பயன்படாத பட்டுப்போன மரங்கள் தான் இப்படி அழகான சிற்பங்களாக உருப்பெற்றிருக்கின்றன

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன மரங்கள் சாதாரணமாக காய்ந்து கிடந்தன. அவற்றை காண்பவர்கள் முகம் சுளித்தபடி மனம் வருந்தி சென்றார்கள். இப்போது அவை கலைப்பொக்கிஷங்களாக உருப்பெற்றுள்ளன.

மாமல்லபுரத்திலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு சுமார் 60 பட்டுப்போன மரங்களை அழகிய சிற்பங்களாக மாற்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிற்பி தான் இந்த மரத்தின் அருகில் நின்று கொண்டிருப்பவர்.

இப்படி பட்டுப்போன மரங்களை சிற்பங்களாக மாற்ற யோசனை கூறியவர்களுக்கும் அதை சிறப்பாக வடிவமைத்த சிற்பிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள். குறிப்பாக இந்த யோசனையை செவிமடுத்து அனுமதி வழங்கிய ஆட்சியருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending