திருவள்ளூர்: சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று சாலை விரிவாக்க பணிக்காக கோவில் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு அதிகாரிகள் அளவுக்கு மிறி செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் பாஜகவிற்கு எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததை வைத்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு என்றும் கூறிய அவர், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து முன்கூட்டியே கணிக்க முடியாது என்றார். மேலும், பாஜக வலிமையோடு இருப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending