
யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை சாலையைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான நிரோசன் வின்சியா (வயது 26) என்ற இளம் குடும்ப பெண், இவர் கடல் தொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைக்கச்செல்வது வழக்கம்.
கடந்த 21ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தேநீர் வைப்பதற்கு அடுப்பினை பற்றவைத்துள்ளார். அப்போது மண்ணெண்ணெய் அடுப்பின் மூடி சரியாக மூடாத காரணத்தால் வெளியில் சிந்திய மண்ணெண்ணெய் அவரின் ஆடையில் சிந்தி தீ பற்றி தீப்பிடித்திருக்கிறது மனைவி தீயில் எரிவதைக் கண்ட கணவன் ஒருவாறு தீயினை அணைத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார்
அதன்பிறகு 4 நாட்ளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குடும்ப பெண் இரண்டு தினம் முன்பு மாலை உயிரிழந்தார்.