judgement வேகமாக வந்த ரயில் முன் இந்தியர் ஒருவரை தள்ளிவிட்டுக் கொலை செய்த அமெரிக்கப் பெண்ணுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 46 வயதான இந்தியர் சுனந்தோ சென், நியூயார்க் அருகில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2012 டிசம்பர் 27 அன்று, சுனந்தோ சென் ரயில் நிலையத்தில் சப் வேயில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தபோது வேகமாக உள்ளே நுழைந்த ரயில் முன்னர் திடீரென ஒரு பெண் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், என்ன நடந்தது என்று தெரியும் முன்னர் தன் உயிரை இழந்தார். அவரை ரயில் முன்னர் தள்ளிக் கொலை செய்த பெண் 33 வயதான எரிகா மெனென்டஸ். இவருக்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களை பிடிக்காதாம். அதனால்தான் அப்படிச் செய்ததாக வாக்குமூலம் அளித்தார். சற்றும் எதிர்பார்க்காத கண நேரத்தில் தான் அவரைப் பிடித்து டிராக்கில் தள்ளிவிட்ட போதிலும், டிராக்கில் விழுந்த அவர், தன்னைக் காத்துக்கொள்ள உடனே முயன்றார் என்று அவர் நீதிபதியிடம் கூறியுள்ளார்.  இந்த வழக்கை விசாரித்து வருகிறார் குயின்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி க்ரிகோரி லசக். ஏப்ரல் 29ம் தேதி தான் தண்டனை விவரத்தை அறிவிப்பதாகவும்,  அவருக்கு 22 முதல் 25 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது. குயின்ஸில் வாழ்ந்துவந்த சுனந்தோ சென், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சொந்தமாக பிரிண்டிக் காபியிங் தொழிலைச் செய்து வந்துள்ளார்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending