உலகின் இரண்டாவது பொருளாதார வலிமையான நாடு என்று பெயரெடுத்த சீனாவின் அதிபரை விட மோடியின் சம்பளம் அதிகமாம். சர்வதேச நாடுகளில் பிரதமர். அதிபர்களின் சம்பளம் குறித்து ஓர் ஆய்வறிக்கை நடத்தப்பட்டது. தகவல்கள் பெறும் சட்டத்தின் அடிப்படையில் உள்ளூர் ஊடகம் பெற்ற தகவல்படி, மோடியின் சம்பளம் ரூ. 16 லட்சம் என்றும், அது வருடத்துக்கு 30 ஆயிரம் டாலருக்கும் சற்று அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் அதிபர் ஸீ ஜிங் பிங் கின் சம்பளம் வருடத்துக்கு 22 ஆயிரம் டாலராம். அதுவும் இந்த வருடத் துவக்கத்தில் 60% அதிகரித்த பிறகாம்! இந்தப் பட்டியலில் 4,03,700 டாலர் சம்பளம் பெற்று வரும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் முதல் இடத்தில் உள்ளார். 4 லட்சம் டாலர் சம்பளமாகப் பெற்று வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரண்டாம் இடத்தில் உள்ளார். அவருக்கு கூடுதலாக 50 ஆயிரம் டாலர் வரிவிலக்கும் உண்டு. கடந்த 2001ல் புஷ் பெற்ற சம்பளத்தை விட தற்போதைய நிலையில் இரண்டு மடங்கு இது. ஜெர்மனியின் மார்கல் 234,383 டாலரும், பிரிட்டிஷ் பிரதமர் 214,782 டாலரும் பெறுகின்றனராம்.
சீன அதிபரை விட மோடியின் சம்பளம் அதிகம்!
உலகின் இரண்டாவது பொருளாதார வலிமையான நாடு என்று பெயரெடுத்த சீனாவின் அதிபரை விட மோடியின் சம்பளம் அதிகமாம். சர்வதேச நாடுகளில் பிரதமர். அதிபர்களின் சம்பளம் குறித்து ஓர் ஆய்வறிக்கை நடத்தப்பட்டது. தகவல்கள் பெறும் சட்டத்தின் அடிப்படையில் உள்ளூர் ஊடகம் பெற்ற தகவல்படி, மோடியின் சம்பளம் ரூ. 16 லட்சம் என்றும், அது வருடத்துக்கு 30 ஆயிரம் டாலருக்கும் சற்று அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் அதிபர் ஸீ ஜிங் பிங் கின் சம்பளம் வருடத்துக்கு 22…
1–2 minutes


Leave a Reply