astroids நாளை மாபெரும் விண்கல் ஒன்று, பூமியைக் கடந்து செல்கிறது.  சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட இந்த ராட்சத விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35 என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். 28 லட்சம் மைல்களைக் கடந்து பயணிக்கும் இந்த ராட்சத கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் ‘கேட்டலினா ஸ்கை சர்வே’ மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியைக் கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வு என்கின்றனர் ஆய்வாளர்கள். மணிக்கு 37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகரும் இந்த விண்கல் பூமியில் மோதினால் ஒரு நாட்டையே அழித்து விடும். இதனால் பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என்பதால், இது குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பக்கிங்காம்ஷைர் பல்கலை வானியல் பேராசிரியர் பில் நேப்பியர் இது குறித்துக் கூறியபோது, ‘2014 ஒய்.பி.35’ போன்ற விண்கற்கள் உலக அளவில் பூமியில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. விண்கற்கள் பூமியில் மோதுவது அரிய நிகழ்வு. இருப்பினும், அவை மோதுவதால் ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது என்றார்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending