தென் ஆப்பிரிக்காவின் துறைமுக நகரமான டர்பனில் உள்ள மசூதி அருகே குண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த வாரம் கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய கிரிமினல் வழக்கு விசாரணை துறை செய்தி தொடர்பாளர், மசூதியை குண்டு வெடிப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அறிக்கை அளிக்க பின்னரே, அந்த பொருள் வெடி குண்டா? இல்லையா என்பது தெரிய வரும்” என்றார்.
கடந்த வாரம் இந்த பகுதியில் கத்தியை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, அவரது நாக்கும் அறுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எந்தவிதமாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.