கியூபாவின் தலைநகரான ஹவானாவிலுள்ள மார்டி சர்வதேச விமான நிலையம் அருகே போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று கியூபாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
போயிங் 737 விமானம், உள்ளூர் நேரப்படி 12:08 மணியளவில், கியூபாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹொல்கூன் நகரத்திற்கு கிளம்பியது.
விமானத்தில் 110 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
”விமானம் மேலே கிளம்பிய போது ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் விமானம் கீழே விழுந்தது” என மெக்சிகன் போக்குவரத்து துறை தனது வலைதளத்தில் கூறியுள்ளது.