கொழும்பில் தொடங்கியது 15-வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மாநாடு

15-வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாடு கொழும்பில் தொடங்கி உள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடு நடந்து வருகிறது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு வருகிற 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தொழில்நுட்ப கொள்கை , தொழில்நுட்பதுறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக எதிர்நோக்க உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச, பிராந்திய நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.