கொழும்பில் தொடங்கியது 15-வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மாநாடு

Published:

01 June12 Sri langa - 202615-வது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநாடு கொழும்பில் தொடங்கி உள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த மாநாடு நடந்து வருகிறது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு வருகிற 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தொழில்நுட்ப கொள்கை , தொழில்நுட்பதுறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக எதிர்நோக்க உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச, பிராந்திய நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img