கொல்கத்தாவை சேர்ந்த டீ வியாபாரி சாகிப் சங்கர் பத்ரா, கடந்த 1986 முதல் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அர்ஜென்டினா கால்பந்து அணியில் மரோடோனா விளையாடியது முதல் தற்போது மெஸ்ஸி வரை முக்கிய வீரர்களை எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். ரஷ்யா சென்று எனக்கு விரும்பான ஹீரோக்களை பார்க்க விரும்பினாலும், பற்றாக்குறை காரணமாக செல்ல முடியவில்லை. தற்போது 60 ஆயிரம் வரை சேமித்து வைத்துள்ளேன். இது ரஷ்யா பயணமாக போதுமானதாக இருக்காது. எனவே டிவியில் கால்பந்து போட்டிகளை காண உள்ளேன் என்றார்.



