பதிலுக்கு பதில் இறக்குமதி வரியை உயர்த்துவோம்; இந்தியாவை நேரடியாக மிரட்டும் டிரம்ப்..!

உலகம் சற்றுமுன் வணிகம்

Pakistan Could Be Put On Donald Trumps Immigration Ban - 2026

வாஷிங்டன் : இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை நாங்களும் உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் பல்வேறு நாடுகள், இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கின்றன. இதில் இந்தியாவும் உண்டு. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சில அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கின்றனர்.

அமெரிக்க மோட்டார் நிறுவனமான ஹார்லி- டேவிட்சன் பைக்குகளின் மீதான வரி விதிப்பை இன்னும் உயர்த்தப்போவதாக இந்தியா மிரட்டுகின்றது. இதே நிலை தொடர்ந்தால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய தயாரிப்புகான மோட்டார் பைக்குகள் மீதான இறக்குமதி வரியை நாங்களும் உயர்த்துவோம்.

நாங்கள் அனைத்து நாடுகளுடனும் பேசி வருகின்றோம். அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகளவிலான இறக்குமதி வரியை அனைத்து நாடுகளும் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களுடனான வர்த்தக உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ளும்.. என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.

முன்னதாக, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தது தொடர்பாக ஜி-7 மாநாட்டில் டிரம்ப் மற்றும் மற்ற உலக நாடுகளின் தலைவர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டதால், டிரம்ப் அந்த மாநாட்டு இடத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.