December 8, 2024, 1:43 AM
26.8 C
Chennai

சாமி சிலையை அவமதித்த கிறிஸ்துவ இளைஞர்கள்!

rowdy pasanga
rowdy pasanga

சத்தியமங்கலம் பகுதியில் பெருமாள் கோவிலில் போதையில் சுவாமி சிலையை அவமதித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகவும் சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்று பெருமாள் கோவிலை இளைஞர்கள் அவமதித்ததால் வெகுண்ட இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்துக்கிடையே மலை உச்சியில் கம்பத்துராயன் கிரி பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

பிற பெருமாள் கோவில்களைப் போல் இங்கும் வருடாவருடம் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

அதே போன்று இந்த வருடம் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை கடம்பூா், சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இருந்து பலரும் பெருமாளை வழிபடச் சென்றுள்ளனர்.

அவர்கள் வழிபாடு செய்து விட்டு வந்த பின்னர் போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், கோயிலில் சுவாமி சிலையை அவமதித்து வேல், சூலம் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ALSO READ:  மதுரையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைப்பு!

இதையடுத்து, கோவிலில் மது போதையில் சுவாமி சிலைகளை அவமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோந்த பொது மக்களும் ஹிந்து அமைப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போதையில் ஆடிய இளைஞர்களில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவரைக் கைது செய்வதில் காவல் துறை மெத்தனம் காட்டி வந்தது.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வீடியோவிலும் இளைஞர் ஒருவர் சிலுவை அணிந்திருப்பதைக் காண முடிந்தது.

காவல் துறை வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பசுவனாபுரம் கிராமத்தை சேர்ந்த டேவிட், ராகுல் மற்றும் நாகேந்திரன் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

பஞ்சாங்கம் டிச.08 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.08ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...