சிஏஏ., சட்டம் குறித்துப் பேச அதிமுக.,வுக்கு தகுதி இல்லை!

madurai bjp sha - 2026

சி ஏ ஏ சட்டம் குறித்து பேச அதிமுக.,விற்கு அருகதை இல்லை; அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது! என்று, மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளர் எம் எஸ் ஷா செய்தியாளர்களிடம் கூறினார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில், பாஜக பொருளாதார பிரிவு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் தேவ்ஜில் தலைமை வைத்தார். மாவட்டச் செயலாளர் முனியாண்டி வரவேற்புரை கூறினார். மாநில பொருளாதார பிரிவுத் தலைவர் எம். எஸ். ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பொருளாதாரப் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பேசிய மாநில பொருளாதார பிரிவு செயலாளர் எம் எஸ் ஷா கூறும்போது:

கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியின் சாதனையை விலக்கி பொதுமக்களுக்கு கூறுவதே இந்த கூட்டத்தின் நோக்கம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்பெற்று மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது .

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும் போது, பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாலையில் இதனை பொது மக்களுக்கு விளக்க பஜக பொருளாதார அணி பிரிவு சார்பில் திருப்
பரங்குன்றம் 16 மண்டபத்தில், பத்தாண்டு கால ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் ,திமுக 516 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து செயல்படுத்தவில்லை எனக் கூறி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததில், பால் விலையை குறைப்போம், மின் கட்டணத்தை குறைப்போம், மின் கட்டணத்தை மாதாந்திர முறைக்கு மாற்றுவோம், மேலும் மதுக்கடைகளை ஒழிப்போம் எனக் கூறினர். தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பல்வேறு பிரிவினர் போதைப் பொருட்களால் சீரழிகின்றனர். இதனை கண்டித்து ,மாநிலத்
தலைவர் அண்ணாமலை ஒரு வாரத்தில் போதைப் பொருளை ஒழிக்க கூறியுள்ளார்.

பொருளாதாரப் பிரிவு என்பது ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு உள்ளது என்பதை கணக்கிடுவது தான் இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மூன்று புள்ளி ஐந்து டிரில்லியன் இருந்தது தற்போது 5 டிரில்லியன் அளவிற்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

பா ஜ க சார்பில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை வேலாயுதம் என்பவருக்கு ஒதுக்காவிட்டால், பத்தாயிரம் பேரை திரட்டி திருமங்கலம் டோல்கேட்டில் எதிர்ப்பு தெரிவிப்பேன் எனக் கூறியது பற்றிய கேள்விக்கு
பாஜகவை பொறுத்தவரை தேர்தல் சீட் கிடைக்க யாருக்கும் உத்தரவாதம் அளிக்க மாட்டார்கள்.

கட்சி மேல் இடம் பார்த்து முடிவு செய்து அவர்களுக்கு சீட் வழங்கும். அண்ணாமலையாக இருந்தாலும் யாருக்கும் உறுதி வழங்க மாட்டார்கள்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க 1800 கோடிக்கு ஜப்பானில் சைத்தான் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கினோம். இதற்கிடையில், கொரோனா வந்துள்ளதால் தற்போது விலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது, பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி வரும் ஆண்டில் மதுரையிலிருந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சி. ஏ .ஏ. சட்டம் குறித்து அதிமுக கருத்து தெரிவித்தற்கு,
சிஏஏ சட்டம் குறித்து பேசுவதற்கு அதிமுக விற்கு அருகதை இல்லை. அதிமுகவின் நிலைப்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு இரட்டை இலை கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளார்கள். அதிமுகவின் சிஏஏ பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கா மல் இருக்க பாஜக தடை ஏற்படுத்துகிறதா, நிச்சயமாக கிடையாது. கோர்ட் என்பது தனி, பாஜக என்பது தனி, அரசு என்பது தனி மூன்றையும் ஒன்று சேர்க்காதீர்கள் என ஷா, கூறினார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories