
இத்தாலி நாட்டில் இரண்டு கன்னியாஸ்திரிகள் கர்ப்பமுற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டின் சிசிலியில் தனிப் பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் உங்களது தொண்டு சேவை பணியின் ஒரு பகுதியாக சொந்த கண்டமான ஆப்ரிக்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற கன்னியாஸ்திரிகளுள் 34 வயதான ஒருவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்பமாக உள்ளதை கண்டுபிடித்தனர்.
அதேபோல் மூத்த கன்னியாஸ்திரியான மற்றொருவரும் ஒரு மாதத்திற்கும் முன் கர்ப்பமுற்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இரண்டு கன்னியாஸ்திகளையும் அவர்களது துறவு வாழ்க்கையில் இருந்து விளக்குவதற்காக நடவடிக்கைகளை திருச்சபை மேற்கொண்டு வருகிறது.

இச்சம்பவமானது பாதிரியார்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ரோமில் உள்ள திருச்சபை ஒன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இரண்டு கன்னியாஸ்திரிகளும் தனது சொந்த கண்டத்திற்கு சென்ற சமயத்தில் வெளிப்படையான பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இருவரும் கற்புகான விதிமுறைகளை மீறியதாகவும், அவர்கள் இனி துறவு வாழ்க்கையில் தொடர முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு முன்பாக இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒரு சில கன்னியாஸ்திரிகள் பாதிரியார்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக போப்பாண்டவர் திருச்சபையில் சிலர் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.