விஜய் மீது கீர்த்திசுரேஷ் கால் வைத்தது ஏன்?

விஜய் மீது கீர்த்திசுரேஷ் கால் வைத்தது ஏன்?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது விஜய், கீர்த்திசுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நட்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் ஷோபாவில் கீர்த்தி சுரேஷ் உட்கார்ந்து தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் காலை மிதித்துக் கொண்டிருக்கும்படியாக உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கீர்த்திசுரேஷை கண்டபடி திட்டி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தில் திட்டும்படி ஒன்றும் இல்லை என்றும் இந்த ஒரு காட்சி படத்தில் உள்ள ஒரு ஜாலியான காட்சி என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துவரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.