‘பத்து செகண்ட் முத்தம்’ படம் சுஜாதா கதையா?

‘பத்து செகண்ட் முத்தம்' படம் சுஜாதா கதையா?

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களில் ஒன்று ‘‘பத்து செகண்ட் முத்தம்’. இந்த டைட்டிலில் தற்போது ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய் நடித்த ப்ரியமுடன்’, ‘யூத்’ மற்றும் ஜித்தன், பெருமாள் போன்ற படங்களை இயக்கியவர் வின்செண்ட் செல்வா‘பத்து செகண்ட் முத்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் சுஜாதா நாவலை அடிப்படையாக கொண்டதா? என்பது குறித்து இயக்குனர் வின்செண்ட் கூறியதாவது:சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்வது தான். அந்த தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட் என்று கூறியுள்ளார்.

மேலும் வின்செட் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிக்கவுள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா கதையின் மைய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.