04 July27 Imran khan - 2026இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன என்று கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில், இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், உதிரி கட்சிகளின் ஆதரவுடன், பிரதமர் பதவியை பிடிக்கும் முயற்சியில், இம்ரான் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுடனான உறவு குறித்து பேசிய அவர்,இந்த தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்கது. 22 ஆண்டு கால பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன; இதில் எனக்கு வருத்தம் உள்ளது என்றும், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending