இதுகுறித்து அகுலோ சாம் என்பவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், காதலுக்கு வயது ஒரு தடையில்லை. 19 வயதான இளைஞர் 39 வயதான பெண்ணை திருமணம் செய்துள்ளார். காதல் அழகானது என பதிவிட்டுள்ளார்.
திருமணம் குறித்த புகைப்படங்களில் மணமகன் அரேபிய ஷேக் போன்ற உடையில் உள்ளார், மணமகளோ பிங்க் நிற உடையில் ஜொலிக்கிறார். இந்த தம்பதிகளின் பெயர் விபரம் தெரியாத நிலையில் அவர்களுக்கு எங்கு மற்றும் எப்போது திருமணம் நடைபெற்றது என்ற விபரமும் வெளியாகவில்லை.