தாய்லாந்து நாட்டில் கடந்த இரு வாரங்களாகப் போராடி குகைக்குள் அகப்பட்டுக் கொண்ட சிறுவர்களும் அவர் தம் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.
1. சிறுவர்களின் பெற்றோர் மற்றும் தாய் பத்திரிகைகளும் எவரும் அந்த பயிற்சியாளரை (அவர் பக்கத்து மியன்மார் நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்) தவறாகப் பேசவில்லை..
2. பத்திரிகைக்காரர்கள் குகையிலிருந்து 2.5 கி.மீ., தள்ளி அனுப்பட்டனர்… (இங்கே பத்திரிகைக்காரனுங்க மோடியின் அம்மா வீட்டு வாசலில் தர்ணா பண்ணியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்)
3. குகையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரால் அருகில் இருந்த நெல் வயல்கள் வெள்ளக்காடான போதும் அவர்கள் அதை பரவாயில்லை என ஏற்றுக்கொண்டனர்.
(இங்கே…..ஆகஸ்டு 23 …45 போன்ற இயக்கங்கள் … எவன் வீட்டு பிள்ளைகள் செத்தா எனக்கென்ன உடனடியாக இரண்டு கோடி ரூபாய் நஷ்டயீடு கொடுத்துவிட்டு குகைக்குள்ளே ஆளை விடு…. என்று போராட்டம் செய்திருப்பார்கள்)
4. சிறுவர்களின் பெற்றோர் போராட்டமோ பத்திரிக்கை டீவியில் அரசைக் குறை கூறும் பேட்டிகளோ கொடுக்கவில்லை… (இங்கே ஒரு பாஜக அமைச்சரும் எங்களிடம் பேசவில்லை…எங்க வீட்டுக்கு வரவில்லை…. போடு ஒரு …. மோடி எங்கே… ஹாஷ்டேக்…. என்று ரகளை செய்திருப்பார்கள்)
இதே இந்தியாவில்…. மும்பை தாக்குதல் போது எனது நண்பன் (A Balasubramanian India) அந்த யூதர்கள் கோவில் அருகே மாட்டிக்கொண்ட போது …. நான் கூட தொடர்ச்சியாக அவனிடம் என்ன வெளியே நடக்கிறது என்று டீவியை பார்த்து பேச முடிந்தது.
நமது கமாண்டோ படைகள் என்ன செய்கிறார்கள் என்பதை லைவ்வாக காட்டி பாகிஸ்தான்காரனுக்கு வழிகாட்டியது நினைவுக்கு வந்தது.
உலகிலேயே கேவலமான கும்பல் எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் வாழும் ஒரே நாடு – அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்து கெடுத்து வைத்திருக்கும் நம் நாடுதான் போலும்!
தாய்லாந்து மக்களை பார்த்து தலை வணங்குகிறேன்.