காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு “விபச்சாரி” பட்டம் வழங்கியுள்ளது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை.
திருவையாறு வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் ஜமாஅத்தார்கள்-க்கு கடிதம் ஒன்று எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த ஜமாத்தாரின் ஊரைச் சேர்ந்த தெற்குத் தெரு … அவர்களின் மகளான M.யாஸ்மினா என்ற பெண், கே.கார்த்திகேயன் என்ற மாற்று மத சகோதரருடன் செய்து கொண்ட காதல் திருமணம் “விபச்சாரம்” என்று கூறப்பட்டுள்ளது. அந்த முழுமையான கடிதத்தைப் படிக்க…
முன்னதாக, இந்தத் திருமணம் குறித்த அழைப்பு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதை அடுத்தே இத்தகைய கடிதத்தை இவ்வாறு எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சிலர் இந்தத் திருமணத்தை வரவேற்றனர். ஆனால் இந்தப் பெண் சார்ந்த சமூகத்தினரின் எதிர்வினையானது சமூக ஊடகங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இத்தகைய திருமணங்கள் “ஹலால்” இல்லை என்று ஒரு ட்விட்டர் வாசி கருத்து தெரிவித்துள்ளார். அந்த பெண்மணி அல்லாஹ்விற்கு பயந்திருந்தால், அவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருமணத்தை வரவேற்கும் சிலர், ஒரு காதல் திருமணத்தை “விபச்சாரம்” என்று அறிவித்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
எத்தனையோ அப்பாவி இந்துப் பெண்களை லவ் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாற்றி இழுத்துக் கொண்டு போய் திருமணம் செய்யும் முறையும், இதே போன்ற விபச்சாரம் என்ற வகையைச் சேர்ந்தது தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக வலைத்தளங்களில்!
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று காட்டுவதுதான் இஸ்லாமிய நடைமுறையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. கேரள லவ் ஜிஹாத் விவகாரத்தில் அகிலாவை இஸ்லாமியப் பெண்ணாக மாற்றியபோது அதைக் காதல் என்று வர்ணித்தவர்கள், ஒரு யாஸ்மினை மட்டும் விபசாரி என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இஸ்லாமிய சமூகத்தினரிடம் இருந்து வெளிப்படையான எதிர்ப்பு வந்துள்ள நிலையில், புது மணத் தம்பதிகளான யாஸ்மினா மற்றும் கார்த்தி கேயனுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத் தளங்களில் முன்வைக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு இந்து மணமகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இஸ்லாமியப் பெண்ணை விபச்சாரி என விமர்சித்தும் , பத்வா அறிவித்தும் கடிதம் எழுதிய திருவாரூர் வட்டார உலமா முகம்மது அபுசாலிஹ்மாவிடம் தொலைபேசியில் கேள்வி கேட்கும் பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனின் உரையாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த உரையாடல்..
……