
மத்திய அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பாரத வரைபடம் 2019 பல விஷயங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
கார்கில் மற்றும் சில இடங்களில் அது பாரதத்தின் ஒரு அங்கமாக இருந்த போதிலும்.. அங்கிருப்பவர்கள் பாரதத்திற்கு ஆதரவாக இருப்பதில்லை. தற்போது இவைகள் லடாக் யூனியன் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு PoK (Gilgit Baltistan) மற்றும் CoK யும் தற்போது லடாக்குடன் இணைக்கப்பட்டு முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நல்லதிற்கே..!
தற்போது ஒருவழியாக பிரச்னை உருவாக்கும் பிராந்தியங்கள் சிறிதாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் இவைதான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனால்.. உலகளவில் உள்ள பாரத எதிர்ப்பு ஊடகங்களும் அவர்களுக்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்கும் துரோகிகளான இடதுசாரி, இவாஞ்சலிஸ்ட், ஜிஹாதிஸ்டுகளும் சைனா ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆகிய இடங்களை காஷ்மீருடன் இணைத்து பெரிய அளவில் தலைப்புச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள முடியாது. இதனால் நம் ராணுவம் தேவையான சர்ஜரிகளைச் செய்து நறுக்க வேண்டிய வால்களை ஒட்ட நறுக்க இந்த சூழல் உபயோகமாக இருக்கும்.
தற்போது இவர்கள் புலம்ப வேண்டிய வாக்கியங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு லடாக், சைனா ஆக்கிரமிப்பு லடாக் PoL, CoL போன்றவையே..!
அதோடு தற்போது அகதிகளாக உள்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் இடங்களுக்குப் போய் தங்கள் வீடுகளை ஆண்டு அனுபவிக்க இந்த மாற்றங்கள் பெரிய அளவில் உபயோகமாக இருக்கும்.
தற்போது லடாக்குடன் ஒப்பிடும்போது சின்னஞ்சிறியதாக ஆக்கப்பட்ட காஷ்மீர் பிரிவினைவாதிகள் மனதில் ஒரு பெரிய அளவில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதோடு மற்ற பிரதேசங்கள் அமைதியாக இருக்க.. இத்தனை காலம் வெறும் ஐந்து மாவட்டங்களினால்.. ஜம்மு காஷ்மீர் பாரத தேசத்திற்கே சவாலாகி எல்லாவித பிரச்னைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த நிலமைக்கு ஒரு நீதி கிடைத்தது போன்ற நிலை ஏற்படும்.
- எஸ்.பிரேமா