
“புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களை இந்த ஒரு விஷயத்தில்தானா பார்க்கிறோம்?
– பாரதியார் (சுதேசமித்ரன் 25.11.1915)
திருவள்ளுவர் பற்றிய சர்ச்சைகளைப் படிக்கும் போது இந்த வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.
திருக்குறளில் பேசப்பட்டிருக்கும் செய்திகள் அது எழுதப்பட்ட காலத்தில் (கி.பி. 500-550 என்கிறார் கமில் ஸ்வெலபில்) வேறு எந்த நூலிலும் எழுதப்பட்டதில்லை. எந்த மொழிக்கும், எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும், எந்தக் காலத்திற்கும், எந்தத் தொழிலுக்கும் ஏற்புடைய செய்திகள் அவை. அதில் ஏதேனும் பத்துக் குறளையேனும் பின்பற்றியிருந்தால் தமிழ்ச் சமூகம் உருப்பட்டிருக்கும். ஆனால் அதை உருப்போடுவதோடு நாம் நின்று விட்டோம்
ஆனால் வள்ளுவரையும் குறளையும் பற்றிய சர்ச்சைகளைக் காலம் காலமாய் வளர்த்து வருகிறோம்
அவர் இந்துவா? சமணரா?
அவர் என்னஜாதி? பூணூல் போட்டிருந்தாரா இல்லையா?
திருக்குறளை எழுதியவர் ஒருவரா? பலரா?
அவருக்கு தாடி இருந்ததா? தலையில் சடையா? மொட்டையா?
வள்ளுவர் வடக்கே இருந்து வந்தவரா?
திருக்குறள் மனுஸ்மிருதியைத் தழுவி எழுதப்பட்டதா?
திருக்குறள் பகவத் கீதையைச் சார்ந்து எழுதப்பட்டதா?
இந்தச் சர்ச்சைகளால் தமிழருக்கு ஏதேனும் பயன் உண்டா?
திருக்குறளை எழுதியது யார் என்ற கேள்விக்கு ஒரு பதில்தான் உண்டு.
திருக்குறளை எழுதியது ஒரு தமிழன்!
தன்னை ஒரு சிமிழுக்குள் சிறை வைத்துக் கொள்ள மறுத்த ஒரு தமிழன்
வாழ்வின் அடிப்படை அறம் என்று நம்பிய ஒரு தமிழன்
அவ்வளவுதான். முற்றும். Dot. Period. The end.
அபத்த சர்ச்சைகளை நிறுத்துங்கள் ஆயாசமாக இருக்கிறது
ஆனால் இவர்கள் ஓயமாட்டார்கள்!
ஒட்டகத்திற்கு ஒரு இடத்திலா கோணல்? தமிழ் நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?
(இதுவும் பாரதி சொன்னதுதான்)
- மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)
இபà¯à®ªà¯‹à®¤à¯ உளà¯à®³ திரà¯à®µà®³à¯à®³à¯à®µà®°à¯ படம௠ஓர௠பிராமண சரà¯à®®à®¾ வினால௠எழà¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à¯ . அவர௠தான௠மà¯à®¤à®²à¯ படம௠வரைநà¯à®¤à®¤à¯
வளà¯à®³à¯à®µà®°à¯ ஒர௠ஹிநà¯à®¤à¯ à®®à¯à®©à®¿à®µà®°à¯ .
மறà¯à®±à¯ˆà®¯à¯†à®²à¯à®²à®¾à®®à¯ கதை