உ.பி., பிகார் இடைதேர்தல் முடிவுகள் பிஜேபி வரும் காலத்தில் ஆட்சியை இழக்கும் என்று காட்டுகிறது… மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டனர்… பிஜேபி அழிந்தது… மோடி அலை முடிந்தது.. ஜனநாயகம் வென்றது…
இப்படி செய்திகளை பரப்பும் ஊடகங்கள் அனைத்துக்கும் என் பதில்…
உத்தரபிரதேஷ் மாநிலத்தில் உள்ள கோரக்பூர்(Gorakhpur) & புல்பூர் (Phulpur) என்ற இரண்டு தொகுதி வெற்றியை நடுநிலையாக கொஞ்சம் பார்க்கலாம்..
கோரக்பூர் தொகுதியில் பிஜேபி தோல்வி… சமாஜ்வாதி கட்சி வாங்கிய வோட்டு 48.87% , பிஜேபி வாங்கிய வோட்டு 46.53%. அதாவது 2.34%வோட்டு வித்தியாசத்தில் தோல்வி.
சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு மாயாவதி அவர்களின் பகுஜன் சமாஜ் கட்சி.. அது போக கடைசி நேரத்தில் தன தேர்தல் வேலைகளை நிறுத்தி கொண்டு அமைதியாக ஆதரவு அளித்தது காங்கிரஸ். அது போதாது என்று மம்தா பேனர்ஜி , லல்லு பிரசாத் யாதவ்,, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பலரும் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு குரல். இஸ்லாமிய ஆதரவு கட்சிகள் பீஸ் பார்டி , முஸ்லிம் லீக் போன்றவை ஆதரவும் சேர்ந்து கொள்ள.
இதில் வெக்கமே இல்லாத விஷயம் என்னவென்றால் கடந்த வருடங்களில் இந்த மாயாவதியும் , முலாயம் சிங் யாதவ் இருவரின் கட்சி ஆதரவாளர்கள் கொஞ்சம் நஞ்சமா சண்டை போட்டனர்????? எவ்வளவு பேர் இந்த கட்சிகளின் அதிகார சண்டைக்கு உயிர் கொடுத்தனர்.. திமுக அதிமுக இரண்டும் கூட்டணி சேர்ந்தால் அதைவிட ஒரு கேவலமான அசிங்கமான அருவருப்பான விஷயம் உண்டோ???? உண்டு… அது இந்த சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி.. காரணம் ?????? பிஜேபி தோல்வி அடையவேண்டும்.. இதற்கு வெக்கமே இல்லாமல் காங்கிரஸ் ராகுல் காந்தி , மற்றும் அத்தனை தலைவர்களும் தங்கள் பிரச்சாரத்தை முடித்து கொண்டு மறைமுகமாக சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அளிக்க…. என்ன நடக்கும்????
இதன் விளைவாக சமாஜ்வாதி கட்சிக்கு அந்த தொகுதியில் சராசரியாக 24% வோட்டு உண்டு.. அத்துடன் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு 12%வோட்டு , இது தவிர கூட்டணி கட்சிகள் வோட்டு என்று அனைத்தையும் கூட்டி 48.87% வோட்டு வாங்கியது என்ன பெரிய சாதனை???
இன்றும் தனித்து மொத்தமாக எதிரிகளை சந்தித்து பிஜேபி வாங்கிய வோட்டு 46.53%.. இப்போ என்ன பிஜேபி படுதோல்வி என்று செய்தி பரப்புகிறார்கள்???… எனவே இதில் என்ன பெருமை இருக்கு. என்ன குறைந்த பட்ச கொள்கை இருக்கு.
கேட்டால் ஊழலுக்கு எதிரான கூட்டணி என்று கூறுகிறார்கள்.. இதை விட சிரிப்பு வேறு என்ன இருக்க முடியும்???? கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறார்கள் மதசார்பற்ற கூட்டணிக்கு கிடைத்தவெற்றி…
கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று கூறுங்கள் நான் ஏற்கிறேன்.. ஆனால் தயவு கூர்ந்து இந்த மதசார்பற்ற என்ற வார்த்தை வேண்டாம். மனித நேயமக்கள் கட்சி , முஸ்லீம் லீக் இது எல்லாம் உங்களுக்கு மகாசாற்ப்ற கட்சி????? திமுக அதிமுக காங்கிரஸ் என்று எவனுக்கும் மதசார்பின்மை பேச தகுதி இல்லை என்று நீங்கள் ஒரு இஸ்லாமிய மதவாத கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து விட்டபின். Phulpur தொகுதி பொறுத்தவரை SP, BSP இரண்டு கட்சிக்கும் வோட்டு சதவீதம் ஜாதிய மத காரணங்களால் சராசரியாக 25 முதல் 28% வோட்டு உண்டு. ஆக இரண்டு கட்சி அத்துடன் காங்கிரஸ் சேர சுமார் 50% வோட்டுகள் உறுதி என்று அனைவரும் எதிர்பாத்தது தான். இந்த தொகுதியில் பிஜேபி தனித்து வாங்கிய வோட்டு 38.81%வோட்டு. ஆகா எப்படி பார்த்தாலும் பிஜேபி தன் பிடியை எந்த விதத்திலும் தளர்த்தவில்லை என்பது தான் நிதர்சன உண்மை.
NDTV, The Hindu, விகடன் , நக்கீரன் என்று அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம். ஆனால் வெக்கமே இல்லாமல் உண்மையை மறைகிறார்கள்.
* உபி., முதல்வர் யோகி அவர்களுக்கு பாடம் கற்பித்தனர் மக்கள்????
இந்தியாவில் அதிகம் ரவுடிகள் அராஜகம் உள்ள மாநிலம் இந்த உத்திரபிரதேஷ்… அடுத்து பிகார்.. யோகி ஆட்சிக்கு வந்த 10மாதத்தில் சுமார் 1142 என்கவுண்டர் மூலம் ரவுடிகளை வேட்டையாடினார். தான் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் ராஜ்ஜியம் முடிவுக்கு வரும் என்று சொல்லி வெற்றி பெற்ற நாள் முதல் விரட்டி விரட்டி முடிவு கட்டினார்.
வரலாற்றில் முதல் முறையாக 2744 தேடப்படும் குற்றவாளிகள் தாங்களாக சரணடைந்தனர்… பொருளாதார முன்னேற்றம் வேண்டி மிக தீவிரமாக வேலை செய்யும் முதல்வர் 100% மக்கள் புறக்கணிக்கவில்லை என்பதை வோட்டு சதவீதம் கூறும்.
எப்படியும் 2019ல் எவரையும் மோடி எதிர்கொள்வார். அதில் எந்த பிரச்சனையும் வரபோவது இல்லை.
அடுத்து பிகார் அராரியா(Araria) தொகுதி… இந்த தொகுதி குணம் இஸ்லாமிய வேர்பாளர்கள் தான் வெற்றி பெறுவார். ஏன் என்றால் இது 43% இஸ்லாமியர் உள்ள பகுதி. இந்துகள் 56%மட்டுமே. எனவே இந்த தொகுதியை பொறுத்தவரை லல்லுபிராத் யாதவ் அவர்கள் ஒரு இஸ்லாமிய வேப்பாலரை நிறுத்த அவருக்கு காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் என்று மட்டும் இல்லாத தலித் மக்கள் வோட்டையும் பிரிக்கும் எப்பவுமே யாருமே அங்கே பிஜேபி வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தது இல்லை.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பிஜேபி என்று ஊடகங்கள் மூலம் ஒருவித மனநோயை பரப்பிவிட்டுவிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அவர்கள் நடத்தும் செய்தி நிறுவனங்களின் சாதனை என்று எடுத்துகொள்ளவும்.
இங்கே விசேசம் என்ன வென்றால் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மாநில தலைவர் இர்பான் அகமத் அவர்கள் தங்கள் கட்சிக்கு வேப்பாளர் அறிவிக்காமல் இந்த தேர்தலில் RJD-காங்கிரஸ் வேப்பாளர் Sarfaraz Alam(இவன் ஒரு மதவெறி பிடித்த ரவுடி) அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது மதச்சார்பற்ற தன்மையை காட்டி கொண்டார்.
ஆக இதற்கு பெயர் என்ன? கம்யூனிஸ்ட் எவனாது வாய தொறக்க சொல்லுங்கள் பார்க்கலாம்….
இறுதியாக :
இந்த கம்யூனிஸ்ட் செய்தி ஊடகங்களும் – முஸ்லிம் லீக் , மனித நேயமக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு மதசார்பின்மை என்று போலியாக நடிக்கும் காங்கிரஸ் திமுக மம்தா லல்லு கம்யூனிஸ்ட் கூட்டணியின் இந்த கட்சிகளின் வேஷம் மக்களுக்கு நிச்சயம் புரிய வெகுகாலம் ஆகாது.
{அது சரி : இங்கே தேர்தல் வோட்டு இயந்திரம் மீது பிஜேபி வெற்றிபெற்றால் குறை சொன்னவர்கள் யாரும் இப்போ பேசக் காணாம்???}
ஆக நான் மேலே சொன்ன காரணம் தான் உண்மை இன்றைய தேர்தல் முடிவுக்கு. அதை மறைத்து எதற்கு இந்த செய்தி ஊடகங்கள் கூச்சல் போடுகின்றன??? செய்தி ஊடகங்களை விட கேவலம் இந்த நாட்டில் எதுவும் இல்லை. நேர்மையாக விவாதம் செய்யவும் – உண்மையை கொண்டு செல்லவும் முடியாது என்றால் எதற்கு செய்தி நிறுவனம் நடத்தனும்!!!
எது எப்படி என்றாலும் 2019தேர்தலை நரேந்திர மோடி தலைமையிலான அணி நிச்சயம் வெற்றி அடையும். என்ன கூச்சல் போட்டாலும் அதை தகர்த்து வெற்றியை தேடி தருவது ஒவ்வொரு பிஜேபி ஆதரவாளர்கள் கடமை. இன்னும் அதி தீவிரமாக செயல்பட தான் இந்த தேர்தல் முடிவுகள் உந்துமே தவிர சோர்வாக அல்ல.
கருத்து / கட்டுரை :- மாரிதாஸ்