thuvaram dhal 1 - 2026

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை –

உருண்டைக்கு:

துவரம்பருப்பு – அரை கப்,

தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 3,

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,

கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

குழம்புக்கு:

புளி – 50 கிராம்,

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,

பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

கடுகு – அரை டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை –

paruppu urundai kuzhambu - 2026

உருண்டை:

துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து அந்த மாவில் கொட்டி பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக செய்துகொள்ளவும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

குழம்பு:

2 கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டி… அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் போட்டு அடிகனமான காடாயில் விட்டு, அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், உருண்டைகளை அதில் ஒவ்வொன்றாகப் போடவும்.

அவை வெந்து மேலே வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொதிக்க விடவும். அவ்வப்போது கிளறிக் கொண்டே இருந்தால், உருண்டைக்குள் உப்பு- காரம்-புளிப்பு சேர்ந்து சுவையாக இருக்கும். குழம்பு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending