பொடுகு குறைய :
செம்பருத்திப் பூ கூந்தலை அற்புதமாக வளரச் செய்யும். செம்பருத்தி, துளசி, வெட்டிவேர் கலந்த எண்ணெய் கூந்தலை நீண்டு வளரச் செய்யும் . மேலும் பொடுகை முழுவதும் கட்டுப்படுத்தும்.
செம்பருத்தி பூ.
துளசி விதை.
வெட்டிவேர்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.
அடர்த்தியாக வளர
பாதாமில் புரதம் இருப்பதால் அவை கூந்தலின் வளர்ச்சியை தூண்டும். அதோடு எலுமிச்சை சாறும் கலந்து பயன்படுத்துவதால் முடி அடர்த்தியாக வளரும்.
தேவையான பொருட்கள் :
பாதாம் பருப்பு.
எலுமிச்சைச்சாறு.
செய்முறை:
10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்துக் கொள்லுங்கள். இதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.