
நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.
குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து ஹார்மோன் மாற்றங்கள் வரை எதுவாகவும் இருக்கலாம். சிலருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு காது அடைப்பது போல ஏற்படும். சில நிமிடங்களில் சரியாகிவிடும் இதற்கு வெர்டிகோ என்று பெயர். இது மெனோபாஸ் சமயங்கலில் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.
இன்னும் சிலருக்கு தலை சுற்றும். காது அடைக்கும். இதயம் படபடவென அடைத்துக் கொள்ளும். பேச்சு திடீரென குளறும். இதற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்.
அல்லது காதுகளில் உண்டாகும் சம நிலையற்ற நிலையில் இவ்வாறு உண்டாகலாம். இன்னும் தீவிரமான நிலை என்னவென்றால் தலை சுற்றி சுய நினைவு இழப்பது. திடீரென ரத்த அழுத்தம் குறைவதால் உண்டாகும் நிலை இது. சிறிது உப்பு கலந்த நீர் குடித்தால் எழுந்து கொள்வார்கள்.
மிகவும் பாரமானதை தூக்கும்போது, அல்லது கீழே உட்கார்ந்திருந்து மேலே எழும்போது தலை சுற்றல் உண்டாகும். இதற்கு ரத்த சோகையும் ஒரு காரணமாக இருக்கலாம். சாப்பிடும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் பக்கவிளைவுகள் உண்டாகும். இதனால் கூட தலை சுற்றல் உண்டாகும். உடலில் நீரிழப்பு ஏற்படும்போது தலை சுற்றல் ஏற்படும்.
உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் குறைவதால், மூளையில் சரியான தகவல் பரிமாற்றம் நடக்காமலிருக்கும்போது தலைசுற்றல் உண்டாகும். தேவையான அளவு நீர் குடிக்கிறீர்களா என தெரிந்து கொள்ளுங்கள். சீரற்ற இதய துடிப்பு இருந்தால், ரத்தம் மூளைக்கு செல்வதில் பாதிப்பு உண்டாகும். உடனே தலை சுற்றல் உண்டாகும். வாய்வினாலும் தலை சுற்றல் உண்டாகும், வாய்வினால் வயிறில் அழுத்தம் தரப்படும்போது, நரம்புகளை பாதித்து தலை சுற்றுவது போலிருக்கும்.
இப்படி தலை சுற்றலுக்கு பல காரணங்கள் உண்டு. எப்போதாவது வந்தால் பயப்படத் தேவையில்லை. ஆனால் அடிக்கடி வந்தால் தவறாமல் மருத்துவரை நாடி பரிசோதித்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
காது சரியாக செயல்படாததன் காரணமாக உடல் சமநிலை பாதிப்படையும்போது தலை தனியாகச் சுற்றுவது போலவோ அல்லது சுற்றியுள்ள பொருள்கள் சுற்றுவது போலவோ தோன்றும். இதை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டிகோ’ (Vertigo) என்பர். இந்த மாதிரித் தலைச்சுற்றல் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது.
இந்த வகையில் குமட்டலும் தலைச்சுற்றலும் இருக்கும். சில மணி நேரம் படுத்தபடி ஓய்வு எடுத்தால், இந்த அறிகுறிகள் அவையாகவே மறைந்துவிடும்.
இதில் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி இரண்டும் இருக்கும். படுத்து இதிலும் படுத்தபடி ஓய்வெடுக்க இவை சரியாகிவிடும்.
இதுதான் அதிக பாதிப்பை விளைவிக்கக் கூடிய வகை. இதில் தலைச்சுற்றலும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தால் இந்த இரண்டும் தீவிரமாகும் நடந்தால் விழுந்து விடுவோம் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
ஒற்றைத் தலைவலி, மிகை ரத்தக்கொழுப்பு , உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, தாழ் சர்க்கரை நோய் ,கட்டுப்படாத நீரிழிவு நோய், கழுத்து எலும்பில் பிரச்சினை, ஆரம்ப கால கர்ப்பம், தைராய்டு பிரச்சினை, இதயத்துடிப்புக் கோளாறுகள், பார்வைக் கோளாறு, மன அழுத்தம், மருந்துகளின் பக்கவிளைவு, தலைக்காயங்கள் உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.
படுத்தபடி கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்த நிலையில் கழுத்து மற்றும் தோள்பட்டைத் தசைகளுக்குப் பயிற்சி செய்தல் தலையை முன்னும் பின்னும் வளைக்கும் பயிற்சிகள், பக்கவாட்டில் வளைதல், நடந்தபடி பந்தைப் பிடித்தல் போன்ற பயிற்சிகள் செய்வதன் மூலம் இவ்வகை தலைச்சுற்றல்கள் தடுக்கப்படுகின்றன.
உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
புகை மது போதை பழக்கங்கள் தவிர்க்கப் பட வேண்டும்
தலை சுற்றினால், உடனே தரையில் படுக்கவும். கால்களைச் சற்று உயரமாக வைக்கவும் .
படுக்கமுடியாத போது தரையில் உட்கார்ந்து முழங்கால்களில் முகம் புதைத்தபடி அமர்ந்திருக்கலாம்.
எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் எழுந்திருக்கவும்
எழுந்தவுடன் நடக்க வேண்டாம்.
எழுந்ததும் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிப்பதை தவிர்க்கவும்
தலையணையைத் தவிர்க்கவும் .
புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரள வேண்டாம்
வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைகளை பயன்படுத்தவும் .
இரவு விளக்குகளைப் பயன்படுத்தி உறங்க வேண்டும் .
மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்தல் நலம்
ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்
மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு மருந்து சாப்பிடுங்கள்.
மன அழுத்தமின்றி வாழப் பழகுங்கள்
வாகனம் ஓட்ட வேண்டாம், ஆபத்தான இயந்திரங்களை இயக்க வேண்டாம்.
காதுப் பரிசோதனை வருடம் ஒருமுறை செய்துகொள்ளுங்கள்.