பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ ஆனந்த் சிங் வீட்டில் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சரணடைவதற்கு இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என போலிஸாருக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பீகாரை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த்சிங். இவர் ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து வெளியேறியவர். இவர் மொகாமா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர். எம்எல் ஏ பதவியேற்ற பின்னரும் இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதியபட்டுள்ளது.
மொகாமா பகுதியைச் சேர்ந்த காண்ட்ராக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆனந்த் சிங் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகாக குரல் மாதிரியை அளிக்கும்படி பீகார் போலீசார் சம்மன் அனுப்பிருந்தார்கள். சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள இவரது பண்ணை வீட்டில் கடந்தவாரம் போலிஸார் திடீரென சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த வீட்டில், ஏகே-47 துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து பாட்னாவில் உள்ள அவரது வீட்டிலும் போலிஸார் சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டிலும் கத்தி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது