
போலீஸ் கான்ஸ்டபிளுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை. பதவி உயர்வும் கிடைப்பதில்லை என்பதால் கான்ஸ்டபிள் ராஜினாமா செய்துள்ளார்.
சார்மினார் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் சித்தாந்த ப்ரதாப் செப்டம்பரில் வேலையில் இருந்து ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதம் மாநில அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
கான்ஸ்டபிள் பணியில் வாழ்க்கை முன்னேறுவது இல்லை என்ற மன வருத்தத்தில் ஒரு கான்ஸ்டபிள் செய்த ராஜினாமாவை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனீகுமார் திங்களன்று ஏற்றுக்கொண்டார்
அதன் காரணங்களை ஆராய்ந்த கமிஷனர் ராஜினாமாவை அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தார்.
இன்ஜினியரிங் படித்த பிரதாப் 2014ல் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார்.
சில காலங்களாக தன் சீனியர்களை பரிசீலித்து கவனித்து வந்தார். 35 வருட சர்வீஸ் முடித்தும் கூட கான்ஸ்டபிளாகவே வேலை ஓய்வு பெறும் விஷயத்தை அறிந்தார்.
இத்தனை சர்வீஸ் உள்ள பிற பிரிவுகளில் ஸ்பெஷல் கிரேடும் இன்கிரிமென்டும் கிடைக்கின்றன. சப்-இன்ஸ்பெக்டர், அதற்கும் மேல் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வோடு வாகனம் பெட்ரோல் போன்ற பிற வசதிகள் இருக்கையில் கான்ஸ்டபிள்களுக்கு அது போன்றவை எதுவும் இல்லை என்று தன் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
கான்ஸ்டபிள் பணி என்று தெரிந்தால் திருமணத்திற்கு யாரும் பெண் கொடுப்பதில்லை. கொடுக்கத் தயங்குகிறார்கள் என்று வருந்தியுள்ளார்.
அவருடைய ராஜினாமாவை பற்றி பிரதாப் மறுபரிசீலனை செய்வார் என்று நினைத்த நிலையில் ராஜினாமாவை அங்கீகரிப்பதாக உத்தரவு வந்துள்ளது.