காபூல்: குர்-ஆனை எரித்ததாகக் கூறி ஆப்கானிஸ்தானில் ஆண்களால் அடித்து, உதைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அங்குள்ள பெண்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். பர்குந்தா என்ற அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். அவரது சவப் பெட்டியை பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் சுமந்து சென்றனர். ஆப்கானிஸ்தானில் செயல்படும் மனித உரிமை அமைப்புகள், மகளிர் நல அமைப்புகள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மகளிர் நல அமைப்புகளின் ஏற்பாட்டின்பேரில் காபூலில் ஞாயிற்றுக்கிழமை பர்குந்தாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பர்குந்தாவின் உடலை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர். முன்னதாக, குர்-ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட அந்த இளம்பெணை ஆண்கள் சிலர் அடித்து உதைத்து, தீ வைத்து எரித்தனர். ஆஃப்கானிஸ்தான் காபூலில் மசூதி அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தா, இஸ்லாமிய புனித நூலான குர்-ஆனை எரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண்ணை அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக அடித்துள்ளனர். அந்தப் பெண்ணை உதைத்து, கல், கம்புகளால் கொடூரமாக அடித்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை ஆற்றின் ஓரத்தில் போட்டு எரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே இந்தச் சம்பவத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் கூறுகையில், அவர் கடந்த 16 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றுள்ளனர். இதனிடையே, அந்த இளம்பெண்ணைத் தாக்கியவர்களில் 4 பேரைக் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். [su_youtube url=”https://www.youtube.com/watch?v=KHmTBzigeWQ”]
குர்-ஆனை எரித்ததாகக் கூறி ஆண்களால் அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவிப் பெண்: நல்லடக்கம் செய்த பெண்கள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week