குர்-ஆனை எரித்ததாகக் கூறி ஆண்களால் அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவிப் பெண்: நல்லடக்கம் செய்த பெண்கள்

Published:

afgan-lady காபூல்: குர்-ஆனை எரித்ததாகக் கூறி ஆப்கானிஸ்தானில் ஆண்களால் அடித்து, உதைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அங்குள்ள பெண்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். பர்குந்தா என்ற அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். அவரது சவப் பெட்டியை பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் சுமந்து சென்றனர். ஆப்கானிஸ்தானில் செயல்படும் மனித உரிமை அமைப்புகள், மகளிர் நல அமைப்புகள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மகளிர் நல அமைப்புகளின் ஏற்பாட்டின்பேரில் காபூலில் ஞாயிற்றுக்கிழமை பர்குந்தாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பர்குந்தாவின் உடலை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர். முன்னதாக, குர்-ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட அந்த இளம்பெணை ஆண்கள் சிலர் அடித்து உதைத்து, தீ வைத்து எரித்தனர். ஆஃப்கானிஸ்தான் காபூலில் மசூதி அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தா, இஸ்லாமிய புனித நூலான குர்-ஆனை எரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண்ணை அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக அடித்துள்ளனர். அந்தப் பெண்ணை உதைத்து, கல், கம்புகளால் கொடூரமாக அடித்துள்ளனர்.  பின்னர் அந்தப் பெண்ணை ஆற்றின் ஓரத்தில் போட்டு எரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே இந்தச் சம்பவத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் கூறுகையில், அவர் கடந்த 16 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றுள்ளனர். இதனிடையே, அந்த இளம்பெண்ணைத் தாக்கியவர்களில் 4 பேரைக் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். [su_youtube url=”https://www.youtube.com/watch?v=KHmTBzigeWQ”]

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img