girl-and-mother-hanged
girl-and-mother-hanged

கடப்பா மாவட்டம் சங்கராபுரத்தில் வசித்து வந்த தாயும் மகளும் தூக்கிலிட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கடப்பாவை சேர்ந்த ஸ்ராவணிக்கும் (29) சிவகுமார் ரெட்டிக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயதில் மகள் தன்விகா உள்ளார். சிவகுமார் ரெட்டி தற்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் பணியில் உள்ளார்.

ஸ்ராவணி மகள் தன்விகாவோடு சேர்ந்து சங்கராபுரத்தில் வசித்து வந்தார். ஆனால் சென்ற ஐந்து ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. வியாழக்கிழமை காலை ஸ்ராவணி தன் மகளோடு சேர்ந்து படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிலிட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

விவரம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சின்னசௌக் போலீசார் அங்கே சோதனை செய்தார்கள். இறந்த உடல்களை உடற்கூறாய்வுக்காக ரிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொண்டு விசாரித்து வருவதாக சிஐ அசோக் ரெட்டி கூறினார். தற்கொலைக்கான காரணங்களை விசாரித்து வருவதாகவும் கூறினார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending