உறவுக்கு அழைத்து வராத வேலைக்கார சிறுமி! தீ வைத்து கொளுத்திய இளைஞன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
fire bath 2
fire bath 2

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் குடும்ப வறுமை காரணமாக 13 வயது சிறுமி ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டில் இருந்த இளைஞன் ஒருவன் அந்த சிறுமியை அடைய எண்ணினான்.

அடிக்கடி அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்து வந்த அந்த இளைஞன், தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளான். ஆனால் அதற்கு அச்சிறுமி ஒப்புக்கொள்ளவில்லை.

ஆத்திரம் அடைந்த அந்த இளைஞன் சிறுமியை அடித்து துன்புறுத்தி இருக்கிறான்.

ஆனாலும் அச்சிறுமி ஆசைக்கு இணங்கவில்லை. அதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த சைக்கோ இளைஞன் அச்சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தான்.

பாதி எரிந்த நிலையில் அச்சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமையல் அறையில் தீ பிடித்துவிட்டதாக அக்குடும்பத்தினர் நாடகம் ஆடினர். ஆனால், அச்சிறுமி கண்விழித்து உண்மையை சொன்னதும், போலீசார் அந்த இளைஞனை கைது செய்தனர்.

இது போன்ற சம்பவம் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.