deadbody - 2026

ஹைதராபாத்தில் பாலியல் தொழிலுக்கு தலைவராக செயல்பட்ட அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் எல்.பி.நகரில் உள்ள ஐ.என் ஆர்.சி.டி காலனியில் செயல்பட்டு வரும் சாராய் துர்கா லாட்ஜ்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அங்கு திடீரென சோதனை செய்த போது நான்கு பாலியல் தொழிலாளிகள் சிக்கினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களை வங்கதேசத்திலிருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு தலைவராக செயல்படுபவர் அங்குள்ள பஞ்சாயத்து துறையில் ஜூனியர் உதவியாளராக இருந்து வரும் அவினாஸ் (32) என தெரிய வந்துள்ளது.

அரசு ஊழியராக இருந்து கொண்டு பாலியல் தொழிலை செய்து வருவதும் இல்லாமல் இந்த பெண்களின் போட்டோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி ரூ.2000 பணம் வாங்கி கொண்டு இந்த பெண்களுக்கு ரூ.200 மட்டுமே கொடுத்துள்ளார்.

அந்த பெண்கள் கொடுத்த தகவலின்படி, அரசு ஊழியர் எம் அவினாஷ், லாட்ஜ் உரிமையாளர் டி வெங்கடேஷ்வதர் ராவ் (52), சர்காமனைச் சேர்ந்த சகிஜன் கதுன் (30), மீர்பேட்டைச் சேர்ந்த ஜி சுஜாதா (27), மீர்பேட்டைச் சேர்ந்தவர், சி மனீஷ் (25), கே பஞ்சரம் (38), மது (30) மற்றும் விகாஸ் குமார் சங்கேத் (22) போன்ற எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending