திருமணமான பெண்ணோடு உறவு.. மூன்று பேர் மிரட்டலால் இளைஞர் விபரீத முடிவு!

Published:

love
love

கர்நாடகாவின் பெங்களூரில் வசிக்கும் யதீஷ் என்ற 23 வயதான இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் 35 வயதான திருமணமான பெண்ணோடு கள்ள உறவில் ஈடுபட்டு வந்தார். இதனால் அந்த இளைட அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி அவரின் கணவர் இல்லாத நேரத்தில் சென்று பெண்ணுடன் இருந்து விட்டு வருவார்.

இந்த கள்ள உறவு விஷயம் அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமச்சந்திரா, சேதன் மற்றும் தேஜா என்ற மூவருக்கு தெரிந்து விட்டது .

இதனால் அந்த முவரும் அந்த யதேஷிடம் பணம் கேட்டு மிரட்ட தொடங்கினர் அதனால் அந்த இளைஞர் தன்னுடைய பைக்கை விற்று அந்த மூவருக்கும் சில லட்சங்கள் பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த மூவரும் மேலும் பணம் தரவில்லையென்றால் இந்த விஷயத்தை அந்த பெண்னின் கணவரிடம் சொல்லி விடுவதாக கூறினார்கள். இதனால் மிகவும் பயந்த அந்த இளைஞர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானர். அதனால் கடந்த வெள்ளியன்று அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அந்த இளைஞரின் சகோதரி காயத்ரி அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த மூவர் மீது புகார் கொடுத்தார். போலீசார் ராமச்சந்திரா, சேதன் மற்றும் தேஜா என்ற மூவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img