radha sagar
radha sagar

பஞ்சாப்பில் திருமணமான இளம்ஜோடி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் உள்ள ஜலத்தர் பகுதியில் வசிக்கும் தம்பதி சாகர் மற்றும் ராதா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன போது ராதாவிற்கும் சாகரின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே ராதா தன் பெற்றோர் வீட்டில் இருப்பதால், சாகரும் தன் மனைவியுடன் மாமியார் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் சாகர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் ராதாவும் வயிற்றுவலியால் கதறியதோடு, தொடர்ந்து வாந்தி எடுத்திருக்கிறார்.

இதனால் பதறிய குடும்பத்தினர் அவரையும் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அப்போது தான் இருவரும் விஷமருந்தி இருந்தது தெரியவந்தது. இருவருக்கும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending